பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்

நாமக்கல், பிப்.21: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கலந்து கொண்டு பேசுகையில், ‘மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும், அதற்கு துணைபோகும் தமிழக அரசைக் கண்டித்தும், நாளை (22ம்தேதி) காலை 9 மணிக்கு நாமக்கல் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும்,’ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, பொருளாளர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், பவித்திரம் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் மாயவன், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, மணிமாறன், கைலாசம், ராணி, அசோக்குமார், நவலடி, கௌதம், துரை ராமசாமி, துரைசாமி, ஜெகநாதன், பாலசுப்பிரமணியம், பழனிவேல், செந்தில்முருகன், சங்கர், ராணாஆனந்த், பூபதி, சிவக்குமார், அறிவழகன், கதிர்வேல், சுகுமார், ஆனந்தன்,  இளம்பரிதி, மதிவேந்தன், நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வரும் 1ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் ஆகியவற்றில் நலஉதவிகள் மற்றும் அன்னதானம் வழங்குவது, வரும் 14ம் தேதி திருச்சி சிறுகனூரில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாட்டில் பெருமளவில் கலந்துகொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, ஸ்டாலின் தான் வராரு, விடியலை தரப்போராரு என்ற திமுக பிரசார பாடல் மற்றும் வீடியோ அடங்கிய சி.டி.யை மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் வெளியிட்டார்.

Related Stories: