கொடைக்கானல் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை இரவோடு இரவாக இடித்து அகற்றம்

 

கொடைக்கானல்: கொடைக்கானல் எம்.எம். தெருப் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை இரவோடு இரவாக இடித்து அகற்றபட்டது. ஆக்கிரமிப்பு தொடர்பான தனிநபர் வழக்கில், சிற்றாலயத்தை இன்று பகல் 1.15 மணிக்குள் இடித்து அகற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது; தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, அப்பகுதியினர் எதிர்ப்பு காரணமாக இடிப்பு முயற்சியை அதிகாரிகள் கைவிட்ட நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணிக்கு சுமார் 300 போலீசார் பாதுகாப்போடு இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Related Stories: