குப்பை கொட்டுவதால் பாழாகிறது பாலாறு பொதுமக்கள் புகார்

சிங்கம்புணரி, பிப். 21:  சிங்கம்புணரி நகரில் உள்ள 18 வார்டுகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மருதம்குண்டு பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் குப்பைகள் தரம் பிரிக்கப்படுகின்றன. அங்கு மக்கும் உரம் தயாகிக்கும் பணிகள் நடைபெறுகிறது. தற்போது பாலாற்று கரையோரங்களில் உள்ள தேத்தான் காடு, வடக்கு வேளாளர் தெரு, உப்பு செட்டியார் தெரு உள்ளிட்ட இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த பாலாற்றங்கரை ஒட்டியுள்ள இடங்களில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் குப்பைகள் பாலாற்றுப் படுகையில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்றனர்.

தேவகோட்டை

தேவகோட்டை  நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சேரும் கழிவுகள் மற்றும் மக்கும், மக்கா குப்பைகளை  ரஸ்தாவில் உள்ள காம்போஸ்ட் குப்பைக்கிடங்கில் கொண்டு போய் சேர்ப்பது  வழக்கம். சமீபகாலமாக அங்கு குப்பை கொட்ட பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் குப்பை நிரம்பி உள்ள லாரிகளை நகரின் ஒதுக்குப்புறமாக நிறுத்தி  வைக்காமல், அரசு மருத்துவமனை அருகே உள்ள குடிநீர் தேக்கத்தொட்டி வளாகத்திலேயே நிறுத்தியுள்ளனர். இதனால் அக்கம் பக்கம் குடியிருப்போர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Related Stories: