ஒன்றிய, மாநில அரசுகளின் சலுகைகள், திட்டங்களை தொகுதி மக்களுக்கு உடனடியாக பெற்று தருவேன்: ஐ.ஜே.கே.வேட்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் உறுதி!!

 

தாம்பரம்: பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஐஜேகே வேட்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் திரி சூலம், மீனம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர்துவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய், சாலை வசதி போன்றவை ஏற்படுத் தப்படும். அரசுடன் பேசி திரிசூலம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

மேலும் ஒன்றிய , மாநில அரசுகளின் சலுகைகள் மற்றும் திட்டங்களை உடனடியாக தொகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் பெற்றுத் தருவேன். எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பாகுபாடு இன்றி 10 ஆயிரம் ரூபாய் பெற்று தருவேன். மேலும் எடப்பாடியார் பெண்களுக்காக வழங்கப்பட உள்ள 2000 ரூபாய் தொகுதியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் வழங்கப்படும் என உறுதியளித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

Related Stories: