போலீஸிடமிருந்து தப்பிக்க குளத்தில் குதித்த ரயில் திருடனின் நூதன முயற்சி தோல்வி… தீவிர தேடுதல் வேட்டையில் ட்விஸ்ட்.!!

மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு பெண் பயணிகளை குறி வைத்து நகை மற்றும் பணத்தை பறித்து செல்லும் திருடன் ரயில்வே போலீஸிடமிருந்து தப்பிக்க நினைத்து குளத்தில் குதித்து உள்ளான். இதனை தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு நீச்சல் வீரர்கள் அந்த திருடனை பிடித்த நிலையில், நீரில் மூழ்கி இருந்தாலும் குளத்தில் படர்ந்திருந்த தாமரை பூவின் தண்டு மூலம் அவன் சுவாசித்தது தெரிய வந்துள்ளது. ரயில்களில் பெண் பயணிகளைக் குறிவைத்து பல நாட்களாக திருடி வந்த அந்த திருடன், பல மணி நேரம் ஒரு குளத்திற்குள் ஒளிந்துகொண்டும், தாமரைத் தண்டு வழியாக சுவாசித்தும் தப்பிக்க முயன்ற சம்பவம் கிட்டத்தட்ட ஒரு திரைப்படக் காட்சி போல அமைந்தது என்றாலும் இறுதியில் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் அவன் பிடிக்கப்பட்டான்.

ஹர்விந்தர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த திருடன் பல மாநிலங்களில் தேடப்பட்டு வரும் ஒரு முக்கிய குற்றவாளி என்றும், நூற்றுக்கணக்கான திருட்டு வழக்குகளில் இவனுக்கு தொடர்பு உள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் அருகே ரயிலின் ஏசி பெட்டியிலிருந்து ஒரு பெண்ணின் கைப்பையை அவர் திருடியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த சேஸிங் தொடங்கியது. சிஹோரா நிலையம் அருகே ரயில் வேகம் குறைந்தபோது, ​​அவர் ஓடும் ரயிலிலிருந்து குதித்துத் தப்பிச் செல்ல முயன்றுள்ளான்.

தன்னை துரத்தி வந்த அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க இருளையும் அடர்த்தியான பாசிப்படலத்தையும் சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்து அருகில் இருந்த ஒரு குளத்தில் குதித்து உள்ளான். குளத்தில் குதித்து சில மணி நேரங்களாகியும் அவன் வெளியே வராததால் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்தது. ஒருகட்டத்தில் நீச்சல் வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், எனினும் அவனை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. சிலமணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவர்கள் கையில் அந்த திருடன் சிக்கி உள்ளான். நெருக்கடியில் மூழ்கி தப்பிக்க நினைத்தவனை வெளியே இழுத்து வந்து கரை சேர்த்தனர்.

கிட்டத்தட்ட 5 மணி நேரம் அவர் எப்படி நீருக்கடியில் மறைந்திருக்க முடிந்தது என அதிகாரிகள் திகைத்து போனார்கள். பின்னர் அந்த திருடன் நீருக்கடியில் மூழ்கியிருந்தபோது சுவாசிப்பதற்காக ஒரு தாமரைத் தண்டை பயன்படுத்தி சுவாசித்து உள்ளான். இந்த தந்திரம் மற்றும் புத்திசாலித்தனம் காரணமாகவே இது அவன் பல மணிநேரம் நீருக்கடியில் இருந்தாலும், ஏதும் அசம்பாவிதம் நேராமல் தப்பிக்க உதவி இருக்கிறது. மேலும் அந்த திருடனின் சாதுர்யம் அதிகரிகளுக்கு உண்மையில் விரக்தி மற்றும் வியப்பை ஒரு சேர ஏற்படுத்தியது. பின்னர் அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​ரயில்களில் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பெண்களைக் குறிப்பாக குறிவைத்து திருடிய புகார்களை ஒப்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.

Related Stories: