திருப்போரூர் ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம்: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

திருப்போரூர், பிப்.21: திருப்போரூர் ஒன்றிய மற்றும் பேரூர் திமுக ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். திருப்போரூர் வடக்கு, தெற்கு ஒன்றிய மற்றும் பேரூர் திமுக ஆலோசனை கூட்டம் திருப்போரூரில் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளரும் எம்எல்ஏவுமான இதயவர்மன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் அன்புச்செழியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கௌரிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசியதாவது.

வரும் 22ம் தேதி பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தாம்பரத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 27ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி படப்பையில் நடக்கிறது. இதை தொடர்ந்து மார்ச் 1ம் தேதி மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட உள்ளது. 14ம் தேதி திருச்சியில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக திமுகவினருக்கு அதிக வேலைகள் உள்ளன. இதில் கலந்துகொண்டு திமுகவினர் தேர்தல் வெற்றிக்கனியை பறித்து மு.க.ஸ்டாலினை முதல்வராக்க உழைக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் நாம் உழைத்தது போதாது. இன்னும் ஒன்றரை மாதங்கள் உழைத்தால்தான் அதற்குரிய பலனாக தலைவரை முதல்வராக பார்க்க முடியும்.

அதிமுக அரசின் செயல்படாத திட்டங்கள், வெற்று அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கண்ணும் கருத்துமாக பணியாற்றினால் வெற்றிக்கனியை பறிக்க முடியும். வரும் தேர்தலில் அதிமுகவும், பாஜவும் சேர்ந்து பணத்தை வாரி இறைத்து வெற்றி பெறலாம் என்று கனவு காண்கிறது. ஆனால் அது நடக்காது என்றார். வடக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் வாசுதேவன், திருப்போரூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன், மாணவர் அணி அமைப்பாளர் ஜெகதீப், திருப்போரூர் நகர மாணவரணி அமைப்பாளர் கோபிகிருஷ்ணன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்போரூர் பேரூர் செயலாளர் மு.தேவராஜ் நன்றி கூறினார்.

Related Stories: