பிரம்மோற்சவ விழா தங்க சூரிய பிரபை வீதியுலாவின்போது காஞ்சி காமாட்சி அம்மனை தூக்கி செல்லும் தண்டு உடைந்தது: பக்தர்கள் கடும் அதிர்ச்சி

காஞ்சிபுரம், பிப்.21: காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 3ம் நாளான நேற்று காலை தங்க சூரிய பிரபையில் உற்சவர் புறப்பாட்டில், அம்மனை தூக்கி செல்லும் தண்டு (கொம்பு) உடைந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து விழாவின் 3ம் நாளான நேற்று காலை அம்மன் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா தொடங்கப்பட்டது. வாகன மண்டபத்தில் இருந்து சுமார் 50 அடி தூரம் கொண்டு சென்றபோது, அம்மனை தூக்கி செல்லும் தண்டு (கொம்பு ) எதிர்பாராதவிதமாக இரண்டாக முறிந்து உடைந்தது. இதை கண்ட பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், உடைந்த தண்டை அகற்றிவிட்டு, அம்மன் சிலையை, தோளில் தூக்கி சென்றனர். கடந்த ஆண்டு சூரிய பிரபை உற்சவத்தின்போது கச்சபேஸ்வரர் கோயில் அருகே  குடை மாற்றும் நிகழ்ச்சியின்போது, இதேபோல் தண்டு உடைந்தது. இதையொட்டி இந்தாண்டு சூரிய பிரபை உற்சவத்தின்போது தண்டு முறிந்ததால் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Related Stories: