எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

ஊத்துக்கோட்டை, பிப்.21: பெரியபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதி நாதன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 53 ஊராட்சிகளிலும் செய்வது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் திமுக கவுன்சிலர்கள் குணசேகரன்,  ஜமுனா அப்புன், எல்.எஸ்.சுரேஷ், கம்யூனிஸ்ட் ரவி, காங்கிரஸ் திருமலை சிவசங்கரன்,   அதிமுக கவுன்சிலர்கள் லதா அசோக், குழந்தைவேலு, வித்யாலட்சுமி வேதகிரி, சுகந்தி பாலாஜி, பாமக புஷ்பா முருகன்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>