ரேஷன் அரிசி 3 டன் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி, பிப்.21: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ் பாபுவுக்கு தொடர் புகார்கள் வந்தன. இதனையடுத்து, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் கும்மிடிப்பூண்டி, புதுவாயல், பெருவாயல், சத்தியவேடு சாலை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கவரப்பேட்டை பகுதியில் பாழடைந்த கட்டிடம் பின்பு 3 டன் எடையுள்ள ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்ததை கண்டனர். பின்னர் அவற்றை பறிமுதல் செய்து தச்சூர் கூட்டு சாலையில் உள்ள கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசி யாரால் இங்கு கொண்டுவரப்பட்டது. எந்த பகுதிக்கு கடத்தப்படுகிறது என பல்வேறு கோணங்களில் கவரப்பேட்டை போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>