×

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சேரன் கலை அறிவியல் கல்லூரியில் 5 ஆயிரம் சதுர அடியில் ஓவியம்

திருப்பூர் : பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சேரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நேற்று உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நோபல் வேல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், 100 மாணவர்கள் இணைந்து வெறும் 1 நிமிடம் 45 விநாடிகளில் 5000 சதுர அடியில் மிகப்பெரிய ஓவியத்தை உருவாக்கி உலக சாதனை படைத்தனர். “டிரா யுவர் வே டு வெல்னஸ்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாணவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மற்றும் நல்ல பழக்கங்களை ஓவியங்களின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வை நோபல் வேல்ட் ரெக்கார்ட் இயக்குனர், சேவரத்னா டாக்டர் ஆர். ஹேமலதா, மதிப்பீடு செய்து நடுவராக செயல்பட்டார். யூடியூபர் திருப்பூர் மோகன் கலந்து கொண்டு மாணவர்களின் திறமையையும், ஒற்றுமையையும் பாராட்டினார்.

இந்த சாதனையை நிகழ்த்திய மாணவர்களையும், நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களையும் கல்லூரி நிர்வாகம் பாராட்டியது. இந்த நிகழ்ச்சி, மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், “ஆரோக்கியம் தான் செல்வம்” என்ற முக்கிய செய்தியை சமூகத்திற்கு எடுத்துரைக்கும் சிறந்த முயற்சியாக அமைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் டாக்டர் அன்பழகன் மற்றும் துணை முதல்வர் டாக்டர் பூங்குழலி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Cheran Arts and Science College ,Bharathiar University ,Nobel World Record ,World Health Day ,
× RELATED தொகுதி மறுவரையறை ஆபத்து:...