கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க செங்கமலம் யானை உற்சாக குளியல்

மன்னார்குடி : டெல்டா மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல ஊர்களில் கடும் வெயில் வாட்டி வருகிறது. காலையில் துவங்கும் வெயில் மாலை வரை சுட்டெரிப்பதோடு இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கிறது.

மன்னர்குடியில் தமிழகத்தில் புகழ் பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், செங்கமலம் என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. 36 வயதுடைய இந்த யானையின் பாப் கட்டிங் உலக புகழ் பெற்றது ஆகும்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் செல்லப் பிள்ளையாக திகழும் இந்த யானை கோயிலில் நடை பெறும் அனைத்து விழாக்களிலும் பாகன் ராஜகோபால் வழிகாட்டுதலில் வலம் வந்து அனைவரையும் மகிழ்ச்சியடை செய்து வருகிறது.

இந்த யானை குளிக்க ஷவர் வசதி உள்ள நிலையில் தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜா எடுத்த முயற்சி காரணமாக கோயில் ஈசானிய மூலையில் சுமார் ஆறரை அடி ஆழத்தில் 500 சதுரடி பரப்பளவில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல நகரங் களில் வெயில் சதமடித்து வருகிறது.

இயல் பான வெப்பத்தை விட இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர். அதன்படி, தற்போது வெயிலின் தாக்கம் உக்கிரமாக தான் இருக்கும் சுழலில் சிறிய உடல் கொண்ட உயிரினங் களே தவித்து வரும் நிலையில், பெரிய உடல் கொண்ட உயிரினமான யானைகளின் தவிப்பு யானைகளுக்கு மட்டுமே தெரியும்.

இந்த சுழலில், கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க தனக்கு கட்டப்பட்ட ஷவரில் காலையிலும், மாலையில் நீச்சல் குளத்திலும் பாப்கட்டிங் செங்கமலம் யானை மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்கிறது. இதனை, கோயி லுக்கு வரும் பக்தர்கள் உற்சாகமாக கண்டு களிக்கின்றனர்.

Related Stories: