×

குடும்பத்தை இழுத்து கண்ணியக்குறைவாக பேசும் எடப்பாடி அன்புமணியை விரட்டி அடிப்பார்கள்: பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சரவணனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: நமது கூட்டணி கட்சியனர் அனைவரும் மிக கண்ணியத்தோடு நடந்து கொள்கிறோம். ஆனால் எதிரணியினர் குடும்பத்தை இழுத்து கண்ணியக்குறைவாக பேசுகிறார்கள். இவ்வாறு பேசினால், போளூர் வாக்காளர்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அடித்து விரட்டுவார்கள். இதில் மாற்றுக்கருத்து கிடையாது.

லஞ்ச வழக்குகள், ஊழல் வழக்குகள் வைத்துக்கொண்டு டெல்லிக்கு போய் திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறீர்கள். எங்கள் கட்சியை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதை பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணிக்கு என்னுடைய இறுதி எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன். நாங்கள் பேச ஆரம்பித்தால் தலைதெறிக்க நீங்கள் ஓட வேண்டிய நிலை வரும். அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அதே மாதிரிதான் எடப்பாடியாரும் ஓவராக பேசிக் கொண்டிருக்கிறார்.

இன்று ஜாதி கட்சியை வைத்துக்கொண்டு நீங்கள் தேவையில்லாமல் ஜாதி மற்றும் குடும்பத்தை பற்றி பேசினால், நாங்கள் பேச ஆரம்பித்தால் உங்கள் நிலைமை என்னவாகும் என்று தெரியாது. அதனால் அன்புமணி நீங்களும் நிறுத்திக்கொள்ளுங்கள், எடப்பாடியார் நீங்களும் இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று நான் மிகவும் மரியாதையாக சொல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Edappadi Anbumani ,Premalatha Vijayakanth ,Chettupattu ,DMDK ,General Secretary ,Saravanan ,Bolur ,Tiruvannamalai district ,Secular Progressive Alliance ,
× RELATED பழநி தொகுதியில் சொந்தக் காசில்...