×

ஆலோசனை முகாம்

பழநி, ஏப்.3: பழநி அருகே தாழையூத்து சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியார் அமைப்புடன் இணைந்து போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் விதம் குறித்த ஆலோசனை முகாம் நடந்தது. கல்லூரியின் தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். தலைமை நிர்வாக அதிகாரி சுவேதா சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.

பயிற்சி மைய மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் மாணவர்களிடம் போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள், நேர்முகத்தேர்வில் நடந்து கொள்ளும் முறை, உடை நேர்த்தி, பேச்சுமுறை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார். முகாமில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

 

Tags : Palani ,Thalaiyuthu Subramanya Arts and Science College ,Subramani ,
× RELATED இடைப்பாடி அருகே காவிரி ஆற்றில் மிதந்த 2 வாலிபர்கள் சடலம்