சாராய வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

விழுப்புரம், பிப். 19:      விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் அடுத்துள்ள மாரியம்மன் கோயில் ஆலத்தூர் கிராமம் மரக்காணம் பகுதியை சேர்ந்த முத்து மகன் செந்தில் (40), பிரபல சாராய வியாபாரியான இவர் மரக்காணம் பகுதியில் தொடர்ச்சியாக சாராயம் காய்ச்சுவது மற்றும் சாராயம் கடத்துவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் செந்தில் மீது மரக்காணம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மரக்காணம் போலீசார் செந்திலை கைது செய்தாலும், ஜாமீனில் வெளியே வரும் அவர் தொடர்ச்சியாக சாராயம் கடத்துவது மற்றும் சாராயம் விற்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டது.  இதனையடுத்து போலீசார் செந்திலை நேற்று கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

Related Stories: