மும்பை: வரும் ஏப்ரல் 20ம் தேதியிலிருந்து விமானங்களில் குறைந்தது 60 சதவீத இருக்கைகள் எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்காமல் பயணிகளுக்கு வழங்க வேண்டுமென விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு பிறப்பித்த முந்தைய உத்தரவு திடீரென நேற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 18ம் தேதி விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு பிறக்கப்பட்ட இந்த உத்தரவு குறித்தும் தற்போதைய சூழல் குறித்தும் நடத்தப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது விமானங்களில் 20 சதவீத இருக்கைகள் மட்டும் கூடுதல் கட்டணமின்றி பயணிகளுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
