அசாம் சட்டப்பேரவை தேர்தல் போலீசாருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை: எம்எல்ஏ உறவினர்களுக்கு அரசு ஒப்பந்தம் கிடையாது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தகவல்

போக்காஜன்: அசாம் பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.தேர்தல் அறிக்கையை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டார். அதன் விவரம்:

* நீதித்துறை மேற்பார்வை மற்றும் தகவல் தெரிவிப்போர் பாதுகாப்புடன் ஒரு சுதந்திரமான ஊழல் தடுப்பு ஆணையம் அமைக்கப்படும்

* பெருநிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெரிய அளவிலான நிலங்களைச் சிறப்புப் புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்கப்படும்.

* அனைத்துக் காவலர்களுக்கும் வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய விடுப்பு வழங்கப்படும்.

* தேயிலைத் தோட்டப் பழங்குடியினர் மற்றும் வேறு ஐந்து சமூகங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்கப்படும்.

* எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரின் நெருங்கிய உறவினர்களுக்கும் அரசு ஒப்பந்தங்களோ திட்டங்களோ வழங்கப்படாது.

* அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் 100 சதவீத பள்ளி சேர்க்கை, வெள்ளம் மற்றும் மண் அரிப்பின் தாக்கத்தைக் குறைத்தல், வருமானத்தை இரட்டிப்பாக்குதல் மற்றும் நிலையான வேலைவாய்ப்பு வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

* முதல் முறை புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க ரூ.1,000 கோடி மதிப்பிலான அசாம் இளைஞர் தொழில்முனைவோர் நிதி, ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் நலவாழ்வு ஆதரவு, வீட்டுவசதி, ரேஷன் மற்றும் சுகாதாரத் திட்டங்களில் விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

* அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் நிலம் ஒதுக்கப்படும்.

* வழக்கறிஞர்கள் மற்றும் சட்டப் பணியாளர்களுக்காக ஒரு வழக்கறிஞர்கள் நலநிதி உருவாக்கப்படும்

* ஆட்டோ, இ-ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு விபத்துக் காப்பீட்டுடன் நல வாரியங்கள் அமைக்கப்படும்.

* 24 மணி நேரமும் குடிநீர் மற்றும் மின்சாரம் உறுதி செய்யப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: