புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரின் தாக்கத்தில் இருந்து இந்திய குடிமக்களை பாதுகாப்பதற்கு முழுமையான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\\” தற்போதைய உலகளாவிய சூழலால் பாதிக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் பல்வேறு துறைகளின் பிரச்னைகளை தணிப்பதற்கு தேவையான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து துறைகளுக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தி இருக்கிறார்.
மேற்கு ஆசியாவில் நடக்கும் போரின் தாக்கத்தில் இருந்து இந்திய குடிமக்களை பாதுகாப்பதற்கு முழுமையான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். தவறான தகவல்கள் அல்லது வதந்திகள் பரவுவதை தடுப்பதற்கு சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான பொதுத் தகவல் அமைப்பு செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்\\” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
