கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் நாள்தோறும் 20 இந்திய தொழிலாளர்கள் பலி

புதுடெல்லி: வெளிநாடுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாள்தோறும் 20க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தரவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநிலங்களவையில் ஜனவரி 29ம் தேதி வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் வழங்கிய தரவுகளின்படி, கடந்த 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 37,740ஐ எட்டியுள்ளது.

உயிரிழப்புக்களுக்கான விரிவான விவரங்கள் இதில் வழங்கப்படவில்லை. அதிகபட்ச உயிரிழப்புகள் 2021ம் ஆண்டிலேயே நிகழ்ந்துள்ளன. 8234 இந்திய தொழிலாளர்கள் வெளிநாடுகளில் தங்களது உயிரை இழந்துள்ளனர். 2022ம் ஆண்டில் இந்திய தொழிலாளர்களின் உயிரிழப்பு எண்ணிக்கையானது 6614ஆக உள்ளது. 2023ம் ஆண்டில் 7291, 2024ம் ஆண்டில் 7747 மற்றும் 2025ம் ஆண்டு 7854 தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த மொத்த உயிரிழப்புகளில் 86சதவீதத்துக்கும் அதிகமானவை வளைகுடா நாடுகளிலேயே நிகழ்ந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: