×

சேரன்மகாதேவி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

வீரவநல்லூர்,ஏப்.3: சேரன்மகாதேவி ஏகேபி ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி சேர்மன் முகமது அப்துல் காசிமின் வழிகாட்டுதலின்படி நடந்த இந்நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகி ஜி.பி ஐயர் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பாளை சதக் அப்துல்லா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் சவுந்திர மகாதேவன் கலந்து கொண்டு மழலைச் செல்வங்களுக்குப் பட்டங்களை வழங்கினார். விழாவையொட்டி நடந்த பரதநாட்டியம், வாத்து நடனம், மேற்கத்திய நடனம், மழலையர்களின் உரை பார்வையாளர்களை வெகுவாகக்கவர்ந்தது. இதில் பள்ளியின் கல்வி இயக்குநர் கலந்தர், முதல்வர் மீனா சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Cheranmahadevi School ,Veeravanallur ,Cheranmahadevi AKB School ,of Excellence ,Mohammed Abdul Kassim ,chief executive ,G.P. Iyer ,Palai Sadak Abdullah ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு