×

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கியதால் கல்வியின் தரம் எவ்விதத்திலும் பாதிக்காது: தமிழ்நாடு அரசு

சென்னை: துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கியதால் கல்வியின் தரம் எவ்விதத்திலும் பாதிக்காது என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசியல் நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். பல்கலைக்கழக மானிய குழு விதிகளை பின்பற்றியே துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள் என அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Venkatajalapathi ,Nellai ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில்...