×

நன்னிலம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரில் எடுத்து வந்த ரூ.50,600 பறிமுதல்

திருவாரூர்,ஏப்.1: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் நேற்று உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.50 ஆயிரத்து 600யை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்லப்படும் ரொக்கம் மற்றும் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்லப்படும் பரிசுப் பொருட்களை பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடகுடி மெயின் ரோட்டில் ஆண்ட்ரூஸ்கவிராஜ் என்பவர் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் அந்த வழியாக 4 சக்கர வாகனம் மூலம் வந்த நாகை மாவட்டம் கீழதஞ்சாவூர் கீழத்தெருவை சேர்ந்த பாலசந்தர் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.50 ஆயிரத்து 600யை பறிமுதல் செய்து தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனசேகரனிடம் ஒப்படைத்தனர்.

 

 

Tags : Nannilam ,Thiruvarur ,Thiruvarur district ,Election Commission ,
× RELATED பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை...