×

திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலில் வளர் பிறை பிரதோஷ வழிபாடு

திருத்துறைப்பூண்டி,ஏப். 1: திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலில் வளர்பிறை பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் (பெரிய கோயில்) வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பிறவி மருந்தீஸ்வரர், நந்தீஸ்வரருக்கும் 11 விதமான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பிரதோஷ நாயனார் நந்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 1000க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு அனைத்து விதமான செயல்களும் குறை இல்லாமல் நடைபெறுவதற்கும். ஊர் மேன்மைக்காகவும் பக்தர்கள் மேன்மைக்காகவும் பிரார்த்தனை மேற்கொண்டனர். சர்வாலய உழவாரப்பணிக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

Tags : Valar Pirai Pradosha ,Thiruthuraipoondi Big Temple ,Thiruthuraipoondi ,Thiruthuraipoondi Periyanayaki Udanurai Paravi Marundeeswarar Temple ,Big Temple ,Paravi Marundeeswarar ,
× RELATED பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை...