×

ஆழ்வார்திருநகரி கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்

வைகுண்டம். ஏப். 1: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர். நவதிருப்பதிகளில் 9வது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் பங்குனி திருவிழா, கடந்த மார்ச் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.10 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து 8.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி வந்த மதியம் 1 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் கண்ணன், விவேக், சுவாதி, எம்பெருமானார் ஜீயர், சம்பத், நிர்வாக அதிகாரி சதீஷ், ஆய்வாளர் நம்பி, கள்ளப்பிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : Panguni festival chariot ,Alwar Thirunagari temple ,Alwar Thirunagari Adinathar Alwar temple ,Panguni festival ,Nava Tirupati ,
× RELATED கோடை காலத்தில் கண்களை பராமரிக்கும் முறை