×

தேர்தல் விதிமுறை மீறல் சீமான் மீது வழக்கு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இவர் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து இரவில் காரைக்குடி தேவர் சிலை அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சீமான் பேசியதாவது: அனைவரும் தூய தமிழில் பேச வேண்டும். தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசினால் தொலைத்துவிடுவேன். சட்டமன்ற தேர்தலில் இலவச அறிவிப்புகளை அள்ளி வீசுகிறார்கள்.

டெல்லியில் சிறப்பான ஆட்சி மூலம் சிறந்த கல்வியை வழங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் மீது சாராய ஊழல் என்று கூறி சிறையில் அடைத்தனர். நல்லவர்களை வரவிட மாட்டார்கள் என்றார். பொதுக்கூட்டத்திற்கு இரவு 10 மணிவரை மட்டுமே அனுமதி என்ற நிலையில், கூடுதலாக 8 நிமிடம் வரை சீமான் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால், சீமான் மற்றும் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Tags : Seeman ,Karaikudi ,Naam Tamilar Party ,Sivaganga ,Karaikudi Thevar ,
× RELATED கள்ளக்குறிச்சி அதிமுக கூட்டத்தில்...