×

மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு மாடுகள் முகாம்

*தொழிலாளர்கள் அவதி

மஞ்சூர் : மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு மாடுகளால் தொழிலாளர்கள் அவதிகுள்ளானார்கள்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மேரிலேண்டு, மைனலாமட்டம், சாம்ராஜ் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிலும் அடர்ந்த காடுகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் சூழ்ந்துள்ளது. இதனால் வன விலங்குகளின் நடமாட்டம் இப்பகுதிகளில் அதிகமாக உள்ளது.

குறிப்பாக காட்டுமாடுகள் அதிகளவில் உள்ளது. சமீபகாலமாக பகல் நேரங்களிலேயே மேரிலேண்டு, சாம்ராஜ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டுமாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுவதை காணலாம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மேரிலேண்ட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் சாவகாசமாக மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதனால் தேயிலை தோட்டத்திற்கு இலை பறிக்க செல்ல முடியாமல் தொழிலாளர்கள் அவதிகுள்ளானார்கள்.

இந்நிலையில் அவ்வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டத்தில் கூட்டமாக காணப்பட்ட காட்டுமாடுகளை கண்டு ரசித்து சென்றனர். இந்நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மேய்ச்சலில் ஈடுபட்ட காட்டுமாடுகள் பின்னர் அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

Tags : Manchuria ,AVATI MANJOOR ,MANJOOR ,Nilagiri district ,Maryland ,Minalamatum ,Samraj ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்