அனுமதியின்றி பாமக சின்னம் வரைந்த நிர்வாகி மீது வழக்கு

தர்மபுரி, மார்ச் 29: தர்மபுரி சட்டமன்ற தொகுதி, பறக்கும் படை குழு தலைவர் கார்த்தி மற்றும் அலுவலர்கள் நார்த்தம்பட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில், அனுமதியில்லாமல் சுவர்களில் பாமக கட்சி சின்னம் வரையப்பட்டிருந்தது. இதுபற்றி பறக்கும் படை குழு தலைவர் கார்த்தி, அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதில், சுவர்களில் கட்சி சின்னங்கள் வரைந்த பாமக ஒன்றிய செயலாளர் அன்பு கார்த்தி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அன்புகார்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: