சென்னை: தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் என திமுக எம்.எல்.ஏ எழிலன் தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை யார் பாதுகாப்பது என்பது குறித்த தேர்தல்; யார் தமிழைக் காப்பார்கள் என்பதற்கான தேர்தல் தான் இது. மதவாத சக்திகளுக்கும் மக்கள் பக்கம் இருப்பவர்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல்; 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயம் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார்.
