- தளவாய்சுந்தரம்
- நாகர்கோவில்
- குமாரி மாவட்டம்
- கன்னியாகுமாரி
- அஇஅதிமுக
- டி.எம்.சி.
- கில்லியூர்
- பாஜக
- Kulachal
- விளவங்கோடு
- பத்மநாபபுரம்
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதி மட்டும் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. மற்ற 5 தொகுதிகளில் கிள்ளியூரில் தாமரை சின்னத்தில் த.மா.காவும், நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, பத்மநாபபுரம் தொகுதிகளில் பாரதிய ஜனதாவும் போட்டியிடுகிறது. 6 தொகுதிகளில் உள்ள ஒரு மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் அதிமுக பெற்றுள்ளது நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.
குறிப்பாக அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரத்துக்கு எதிரான அலைவீச தொடங்கி இருக்கிறது. இது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கன்னியாகுமரியில் தளவாய்சுந்தரம் போட்டியிட்டால், அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டி போடுவேன். அவரை விட ஒரு ஓட்டு கூடுதலாக வாங்கவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என்று ஆவேசமாக பேட்டி கொடுத்தார்.
கன்னியாகுமரி தொகுதியில் 72 சதவீதம் நாடார் வாக்கு உள்ளது. ஆகவே தளவாய்சுந்தரத்தை தவிர வேறு ஒருவரை போட்டியிட வைத்தால், அவருக்கு ஆதரவு வழங்குவதாகவும் கூறியிருந்தார். இந்தநிலையில் அதிமுகவில் உள்ள நாடார் சமுகத்தை சேர்ந்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சன் பகுதியில் உள்ள காமராஜர் சிலையின் மேல் பகுதியில் சுற்றியுள்ள கம்பிவேலியில் தளவாய்சுந்தரத்திற்கு எதிராக போஸ்டர் தொங்கவிடப்பட்டுள்ளது.
இதில் தளவாய்சுந்தரத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இவன் நாடார்கள் என்று 2 முறை எழுதப்பட்டு இருந்தது. காமராஜர் சிலையில் தளவாய்சுந்தரத்தை கண்டித்து தொங்கவிட்ட போஸ்டரால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் போஸ்டரை அப்புறப்படுத்தினர். தளவாய்சுந்தரத்திற்கு எதிராக அலைவீசி வருவதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உளளனர்.
