டெல்லி: 2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளை அதிகரிக்க ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. உயர்த்தப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் 2029 நாடாளுமன்றத் தேர்தலை நடத்த பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. அரசியலமைப்பை திருத்தி தொகுதி மறுவரையறை ஆணைய மசோதாவை இந்த வாரம் தாக்கல் செய்ய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகளோடு ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ஒத்திசைவு ஏற்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறார். ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டப்படி தொகுதி மறுவரையறை செய்தால் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 816ஆக உயரும். உயர்த்தப்பட்ட 816 தொகுதிகளில் பெண்களுக்கு 273 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது
