அரசியல்ல ரீ-டேக் இருக்குன்னு நடிக்குறாரு எலிமென்ட்ரி ஸ்கூல் பையன்தான் விஜய்; வச்சு செய்த ஓபிஎஸ் மகன்

 

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனியாது நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் எம்பி ஓபி.ரவீந்திரநாத் பேசியதாவது: அதிமுகவை அபகரித்து தான், தொண்டர்களின் உரிமையை பறித்து தான் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்தார். துரோகத்திற்கான நோபல் பரிசு வழங்கலாம் என்றால், எடப்பாடிக்கு தான் கொடுக்க வேண்டும். அவருடன் கூட்டணி வைப்பதற்கு பதில் தூக்கில் தொங்கலாம். இதெல்லாம் நான் சொல்லவில்லை. டிடிவி.தினகரன் கூறினார். இன்று அவர், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கூட்டணி வைத்துள்ளார். பழனிசாமியை நம்பினால் எதுவும் வெற்றிகரமாக நடக்காது என்பது தான் உண்மை. என்டிஏ கூட்டணி கட்சிகள் அரசியல் லாபத்திற்காக நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கின்றன. என்டிஏ கூட்டணியால் தமிழ்நாட்டின் சுயமரியாதை, சமத்துவம் மற்றும் திராவிட சிந்தனை பாதிக்கும். இதை மக்கள் உணர வேண்டும். இவ்வாறு பேசினார்.

சிங்கம்புணரியில், நேற்று முன்தினம் இரவு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் பேசுகையில், தமிழக அரசியலில் தற்போது புதிதாக ஒருவர் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். அரசியல்னா ஏதோ சினிமா படத்தில் 3 மணிநேரம் நடிச்சிட்டு போவது மாதிரி நடிச்சிட்டு போறார். கிளைமாக்ஸில் அவர் 4 பேரை அடிக்கிற மாதிரி நடிக்கலாம். ரீ டேக் கூட வாங்கலாம். ஆனால் அரசியலில் ரீ டேக் எடுக்க முடியாது. அரசியல் களத்தில் இறங்கி 4 பேரின் கண்ணீரைத் துடைப்பவன் தான் உண்மையான தலைவன். இவ்வாறு பேசினார். முன்னதாக ஓ.பி.ரவீந்திரநாத் அளித்த பேட்டியில், ‘‘விஜய் இப்போதுதான் எலிமென்ட்ரி ஸ்கூலில் படிச்சுக்கிட்டிருக்கிறாரு. இது அவருக்கு முதல் தேர்தல். தேர்தல்களம்னா என்னான்னு இப்பதான் கத்துக்க ஆரம்பிச்சுருக்காரு… யார் களத்துல நின்றாலும், தேர்தலில் உண்மையான ஹீரோ யாருன்னு மக்கள் நிரூபிச்சு காட்டுவாங்க…’’ என்றார்.

 

Related Stories: