சென்னை: வறண்ட வானிலை காரணமாக கரூர் மாவட்டத்தில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் படிப்படியாக வெப்பம் உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
அதிபட்சமாக கரூர் மாவட்டத்தில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், மன்னார் வளைகுடா முதல் தெற்கு மத்திய மகாராஷட்ரா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் 26ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
