புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டி தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: கட்சியில் சேர்ந்த ஒரே நாளில் பாஜ மாஜி அமைச்சருக்கு சீட்

 

சென்னை: புதுச்சேரியில் தனித்துப்போட்டியிட்டும் தவெக, 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் நேற்று முன்தினம் பாஜவில் சீட் கிடைக்காமல் கட்சியில் இருந்து வெளியேறிய தவெகவில் இணைந்த மாஜி அமைச்சருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் தனித்து களம் காண்கிறது.

அதன்படி, லாஸ்பேட்டை – சாமிநாதன், காரைக்கால் தெற்கு – அசனா, நெட்டப்பாக்கம் (தனி) – பெரியசாமி, திருபுவனை (தனி) – சாய். சரவண குமார், முத்தியால்பேட்டை – பிரகாஷ்குமார், பாகூர் – தனவேலு, ராஜ்பவன் – சந்திரன், உப்பளம் – சிவா, உழவர்கரை – சசிபாலன், அரியாங்குப்பம் – குமரவேலு, மணவெளி – ராமு, வில்லியனூர் – ரமேஷ், முதலியார்பேட்டை – மணிபாலன், மண்ணாடிப்பட்டு – பாரதிதாசன், உருளையன்பேட்டை – மரிய பிரான்சிஸ், மங்கலம் – சத்யா, காமராஜ் நகர் – சுமன், நெல்லித்தோப்பு – விக்னேஷ்வரன், காலாப்பட்டு – சசிகுமார், இந்திரா நகர் – முருகன், கதிர்காமம் – ஜெயந்தி, ஊசுடு (தனி) – சரகணபவா, தட்டாஞ்சாவடி – பன்னீர்செல்வம், ஏம்பலம் (தனி) – தமிழ்ச்செல்வன், நெடுங்காடு (தனி) – காமராஜ், திருநள்ளாறு – ராஜமுகம்மது, காரைக்கால் வடக்கு – வெங்கடேஷ், நிரவி டி.ஆர்.பட்டினம் – கணேஷ், மாகே – பிரிஜேஷ், ஏனாம் – தோட்டா ராஜூ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள சாய் சரவணகுமார், பாஜ முன்னாள் அமைச்சர். நேற்று முன்தினம் வெளியான பாஜ வேட்பாளர் பட்டியலில் சீட் கிடைக்காததால், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அக்கட்சியில் இருந்து வெளியேறினார். பாஜவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்த ஒரே நாளில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: