×

குடிநீர் பிரச்னையை தீர்க்க உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு ரூ.60 கோடி ஒதுக்கிய திமுக அரசு

*பொதுமக்கள் நன்றி

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சியாக இருந்தது. இந்த பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பு ஏற்றவுடன் பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றும் வகையில் உளுந்தூர்பேட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தினர். இதனால் 18 வார்டுகள் இருந்த உளுந்தூர்பேட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதுடன் 24 வார்டுகளாக தரம் உயர்த்தப்பட்டது.

வளர்ந்து வரும் பகுதியாக உளுந்தூர்பேட்டை நகராட்சியாக இருந்ததால் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் கெடிலம் மற்றும் மட்டிகை உள்ளிட்ட பகுதியில் இருந்து நகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் பைப்லைன்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டதால் அதனை மாற்றி தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் வகையில் ரூ 32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் துவங்கப்பட்டது.

இந்த பணிகளுக்காக மேலும் ரூ.28 கோடி அடுத்த கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலை உள்ளதால் உளுந்தூர்பேட்டை நகராட்சி பொதுமக்களின் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க ரூ.60 கோடி வரையில் திட்டம் வகுத்த தமிழக முதல்வருக்கு உளுந்தூர்பேட்டை தொகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Tags : DMK government ,Ulundurpettai ,Kallakurichi district ,DMK… ,
× RELATED உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னையில்...