×

மகாராஷ்டிராவில் 58 பெண்களிடம் அத்துமீறிய பிரபல ஜோதிடர் கைது

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கை சேர்ந்த பிரபல ஜோதிடர் அசோக் கராத்(67).கராத் சடங்குகள் செய்வதாக கூறி போதை பொருள் கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண்(35) போலீசில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து அசோக் கராத்தை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அந்த பகுதியில் கேப்டன் என்று அழைக்கப்படும் பிரபல சாமியார் கராத்தை வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற வணிகக் கடற்படை அதிகாரியான கராத், 58க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags : Maharashtra ,NASHIK ,ASHOK KARAT ,NASHIK, STATE OF MAHARASHTRA ,Ashok Karatha ,
× RELATED சேலத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு...