கடலூர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று

கடலூர், பிப். 16: கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 25, 074 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சை முடிந்து 4 பேர் வீடு திரும்பிய நிலையில், இதுவரை 24 ஆயிரத்து 691 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 62 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

34 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 85 ஆயிரத்து 542 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பில் ஏற்கனவே நோய் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேர் அடங்குவர். 161 பேரின் பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளது.

Related Stories:

>