சீர்காழி, மார்ச் 11: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்ட வழங்கல் துறை தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த முருகானந்தம் குத்தாலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை வட்ட வழங்கல் துறை தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த சண்முகம் சீர்காழி வட்ட வழங்கல் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டு அவர் பதவி பொறுப்பேற்றுக் கொண்டார். வட்டவழங்கல்துறை தாசில்தார் சண்முகத்திற்கு அனைத்து துறை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
