கடலூர் : கடலூர் 3வது வார்டு வில்வநகர் திரவுபதி அம்மன் கோயில் பகுதி மகளிர் சுய உதவி குழு சார்பில் மகளிர் தின விழா நடந்தது. மாமன்ற உறுப்பினரும், மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சங்க தலைவருமான பிரகாஷ் தலைமை தாங்கி, மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழக முதல்வர் மகளிர்க்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சுய உதவி குழுவினருக்கு வாழ்வாதாரம் மேம்படுவதற்கு சிறு குறு தொழில் தொடங்கத் திட்டம், கடனுதவிகள், மகளிர் உரிமை தொகை என எண்ணற்ற திட்டங்களை மகளிருக்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது, என்றார். மகளிர் குழு அழகம்மா வரவேற்றார்.
மகளிர் அமைப்பை சேர்ந்த சத்தியபாமா, மாலா, ஜெயா முன்னிலை வகித்தனர். கிருஷ்ணவேணி, அம்மு, திலகம் சுகுணா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர். விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது செல்வராஜ், முருகன், அஷ்ரப் அலி, டைல்ஸ் பாஸ்கர், நாட்டுப்புறக் கலைஞர் சம்பந்தமூர்த்தி, வினோத்குமார், பரணி குமார், மணிகண்டன், பிரகலநாதன், நெடுஞ்செழியன், வட்ட செயலாளர்கள் சுப்ரமணி, நெடுஞ்செழியன், ஜெகதீசன், அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
