தொகுதியே இன்னும் ஒதுக்கல அதுக்குள்ள பாமக பிரசாரம்: சோளிங்கரில் அதிமுக, அமமுகவினர் அதிர்ச்சி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது. திமுக சார்பில் கூட்டணி கட்சியினர் இடையே தொகுதி உடன்படிக்கை பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி கட்சிகளிடையே இன்னும் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை தொடங்கப்படாத நிலையில், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்படும் என அதிமுக, அமமுக, பாமகவினர் சீட்டுக்கு மல்லுக்கட்டி வருகின்றனர்.

இதற்கிடையில், சோளிங்கர் தொகுதி அதிமுக கூட்டணியில் சீட்டு யாருக்கென்று இன்னும் ஒதுக்கப்படாத நிலையில், தங்களுக்கு தான் தொகுதி என்று பாமகவினர் தற்போதே தேர்தல் வேலைகளை அதி தீவிரமாக துவங்கியுள்ளனர். குறிப்பாக, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அன்புமணி டீம் பாமக செயலாளர் வக்கீல் சரவணன், சோளிங்கர் தொகுதி தனக்கு நிச்சயம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில், தொகுதி முழுவதும் வேட்பாளர் போல் வலம் வரதொடங்கியுள்ளார்.

மேலும் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் உட்பட பலரை ரகசியமாக சந்தித்து ஆதரவு கோரும் வேலையில் ஈடுபட்டுள்ளாராம். அமமுகவை சேர்ந்த பார்த்திபனோ நான் ஏற்கனவே சோளிங்கரில் எம்எல்ஏவாக குறுகிய காலமே இருந்தேன். எனவே இந்த முறை கூட்டணியில் எப்படியும் அமமுகவுக்கு தான் சோளிங்கர் தொகுதி ஒதுக்கப்படும். யார் முட்டி மோதினாலும் நான்தான் வேட்பாளர்னு மல்லுக்கட்டுகிறாராம். இது, அதிமுக மற்றும் அமமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: