‘இன்னும் ரெண்டே நாளுதான்’

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து பாமக நிறுவனர் ராமதாஸ் கொண்டு பேசுகையில், மகளிர் இந்த நாட்டை ஆள வேண்டும். மகளிரை இழிவுப்படுத்திய காலம் சென்று, மகளிர் மேம்பாட்டுக்காக, மகளிரே முன்வந்து திட்டங்களை தீட்ட வேண்டும். அப்படிப்பட்ட காலம் வரவேண்டும். என்னுடைய ஆசை 15 ஆண்டுகள் பெண்களே முதல்வராக வர வேண்டும். 3 முறை பெண்களே முதல்வராக வர வேண்டும். அதே போன்று சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேரும் பெண்களாக இருக்க வேண்டும்.

அது நடக்குமா, சாத்தியமா, ஆண்கள் விடுவார்களா, சட்டம் இடம் கொடுக்குமா என பல கேள்விக்குறிகள் மத்தியில் தான் மகளிர் சமூகம் வாழ்ந்து வருகிறது. மகளிர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். என்றார். பின்னர் கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும் என்றார். நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு, எல்லாம் நல்லபடியா நடக்கும் என பதில் அளித்தார்.

Related Stories: