விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசத்தில் பாமக தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு பேசுகையில், புதுச்சேரிக்கு ஆண்கள் கோயில்களுக்கு சென்றாலும், மது அருந்த செல்வதாகத்தான் கூறுவார்கள் என்றார். இது அங்கிருந்த பெண்களை முகம் சுளிக்க வைத்தது.
மகளிருக்கு ரூ.1000 வழங்கும் தமிழக அரசை குறைகூறியபோது, கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் முகம் வாடியது. தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமை தொகை ரூ.2000 வழங்குவதாக அவரது கூட்டணியில் உள்ள அதிமுகவின் எடப்பாடி கூறியது கூட தெரியாமல் வாய்க்கு வந்ததை சவுமியா பேசுவதாக அங்கிருந்த பெண்கள் ஒருவருக்கு ஒருவர் புலம்பி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வானூரில் அரசு கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில், அங்கு அரசு கல்லூரிகளே இல்லை என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தனது புகைப்படத்தையோ பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்றும் அனைத்து பிரச்னைக்கும் காரணம் சவுமியா தான் என்று ராமதாஸ் தெரிவித்திருந்த போதிலும், பேனர்களில் ராமதாஸ், அன்புமணியின் புகைப்படம் இருந்தது, ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது.
