சொன்னாரு..! செஞ்சாரு..!! திருக்கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

சொன்னாரு: திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் பிற சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, அவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டது.

செஞ்சாரு: தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளைப் பாதுகாப்பது ஆன்மிக ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் ஒரு பெரும் சவாலாக இருந்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, “திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுப் பாதுகாக்கப்படும்” என்ற முக்கிய வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருந்தார்.

ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இந்து சமய அறநிலையத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்த பெருமளவிலான கோயில் சொத்துகள் அரசுத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. மே 2021 முதல் தற்போது வரை சுமார் ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மொத்தம் ரூ.3,819 கோடி மதிப்பிலான நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளிலேயே அதைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, இதுவரை 1.67 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் 3டி மேப்பிங் தொழில்நுட்பம் மூலம் அளவிடப்பட்டு, டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கைகளில் பல இடங்களில் சட்டப் போராட்டங்களும், உள்ளூர் எதிர்ப்புகளும் நீடிக்கின்றன.

அண்மையில் மதுரை உயர் நீதிமன்ற கிளை, அனைத்துக் கோயில் நிலங்களின் விவரங்கள் மற்றும் வாடகைதாரர்களின் பட்டியலை வெளிப்படைத்தன்மையுடன் இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டுள்ளது. இது ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக தடுக்க உதவும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, கோயில் சொத்துகளைக் காப்பதில் ‘திராவிட மாடல்’ அரசு காட்டும் ஆர்வம் ஆன்மிக அன்பர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டிருப்பது, கோயில் நிர்வாகத்தைச் சுயசார்புடையதாக மாற்றவும், கோயில் திருப்பணிகளுக்கு நிதி ஆதாரத்தை பெருக்கவும் வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* ரூ.1000 கோடிக்கு மேல் வசூல்
நிலங்களை மீட்பது மட்டுமின்றி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் மற்றும் கட்டிடங்களுக்கான நிலுவை வாடகை மற்றும் குத்தகைத் தொகையாக, கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை அமைப்பு மற்றும் தனி வட்டாட்சியர்கள் நியமனம் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சொத்துகளிலிருந்து இந்த அதிரடி வருவாய் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: