முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை பாராட்டு

பொள்ளாச்சியில் நேற்று பாரத பிரமரின் மக்கள் மருந்தகம் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது, சிவில் சர்வீஸ் தேர்வுகளின் முடிவு வந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 60 பேர் தேர்வாகியுள்ளனர். இது மகிழ்ச்சிகரமான விஷயமாகும்.

அதுவும் 10 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய அளவில் டாப் 10 இடத்திற்குள் தமிழக்தை சேர்ந்த இருவர் வந்துள்ளனர். குடிமைப் பணி தேர்வில் தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டை தெரிவிக்கிறோம். இதில், பாராட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், முதல்வர் வந்த பின் நல்ல விஷயத்தை செய்திருக்கிறார்.

அதாவது, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு யாராவது பயிற்சி எடுக்கிறாங்க என்றால், மாதம் ரூ.7500 வீதம் 10 மாதத்திற்கு ஊக்கத்தொகை கொடுப்பது நல்ல விஷயம். அதனை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அதுபோல், முக்கிய தேர்வுக்கு ரூ.25 ஆயிரம் கொடுப்பதும் நல்ல விஷயம். நேர்முக தேர்வில் தேர்வானால் ரூ.50 ஆயிரம் கொடுப்பதாக கூறுவதும் பாராட்ட கூடியதாகும். இந்த பணம், கோச்சிங் சென்டரில் சென்று படிக்க கூடிய குழந்தைகள் அனைவருக்கும் கண்டிப்பாக பயன்படும். இதற்காக, தமிழ்நாடு முதல்வரை பாராட்டலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: