37 மாநிலங்களவை இடங்களுக்கு 40 பேர் வேட்புமனு

புதுடெல்லி: நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் கடைசி நாளான நேற்று மொத்தம் 40 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். பீகார், ஒடிசா, அரியானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

பீகாரில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், பாஜ தேசிய தலைவர் நிதின் நபின், மகாராஷ்டிராவில் சரத்பவார் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் ராம்தாஸ் அதாவலே, ராம்நாத் தாக்கூர்உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். தேவைப்படும் இடங்களில் வரும் 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

Related Stories: