நாராயணகுரு பொறியியல் கல்லூரி மாணவிகள் சாதனை

 

அருமனை: நாராயணகுரு பொறியியல் கல்லூரி கணினி அறிவியல், பொறியியல்துறை மாணவிகள் அராத்தி எஸ்.பி., அஜிஷா ஏ., ஸ்டெஃபி ஈ., சலீனா எஸ். ஆகியோர் ஜென்கார்ப் டெக்னோ தீர்வுகள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாணவிகளின் இந்த சாதனைக்கு கடின உழைப்பு, தொழில்நுட்ப திறன், விடாமுயற்சியின் பலனாகும்.

அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், சக மாணவர்கள் அனைவரும் மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். பணியமர்வு ஆணையை நிறுவனத் தலைவர் பாலாஜி சித்தார்த் வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் எம். சிவபிரகாஷ் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாவது: “மாணவர்களின் வெற்றி எங்கள் கல்வி தரத்திற்கும், பயிற்சி முறைக்கும் ஒரு சான்றாகும். அவர்களின் எதிர்காலம் மேலும் சிறக்க எங்களது வாழ்த்துகள்.” என்றனர்.

 

Related Stories: