×

திருச்சியில் மார்ச் 9ல் திமுக மாநில மாநாடு; காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து 15,000 திமுகவினர் பங்கேற்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் ஆலந்தூர் கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் தீர்மானக்குழு செயலாளர் மீ.அ.வைதியலிங்கம் தலைமையில் நேற்று நடை பெற்றது. மாவட்ட துணை செயலாளர்கள் இ.கருணாநிதி, எம்எல்ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, து.மூர்த்தி மற்றும் மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று தீர்மானங்களை விளக்கி பேசினார்.

இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் எல்.இதயவர்மன், மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ.மனோகரன், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் க.அன்புச்செல்வன், ஜி.சி.அன்புச்செழியன், பகுதி செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், த.ஜெயகுமார், எஸ்.இந்திரன், மாடம்பாக்கம் நடராஜன், ஏ.கே.கருணாகரன், இ.எஸ்.பெர்னாட், செம்பாக்கம் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் ந.கோபால், எஸ்.டி.கருணாநிதி, பையனூர் எம்.சேகர், ஏ.வந்தேமாதரம், திருமுடிவாக்கம் இ.மணி, கே.பி.ராஜன், நகர செயலாளர்கள் ஜெ.சண்முகம், எஸ்.ஜபருல்லா, எம்.கே.டி.கார்த்திக், த.வினோத்குமார், பேரூர் செயலாளர்கள் மு.தேவராஜ், ஜி.டி.யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், திருச்சியில் மார்ச் 9ம்தேதி எழுச்சியுடன் நடைபெறவுள்ள “ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற திமுக மாநில மாநாட்டில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து அலைகடலென அணிதிரண்டு பங்கேற்பது, இந்த மாநில மாநாடு திருப்புமுனை மாநாடாக அமைந்து முதல்வர் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் நல்லாட்சி அமையப்போகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் பகுதி – ஒன்றிய – நகர – பேரூர் சிற்றூர்களில் இருந்து பேருந்து – வேன் – கார்கள் மூலம் 15,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பது, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அமோக வெற்றிபெற செய்து, 2வது முறையாக முதல்வரை அரியணையில் அமர்த்திட அனைவரும் பொறுப்புடன் தேர்தல் பணியாற்றவேண்டும். திருவிடந்தையில் நடைபெற்ற மண்டல மாநாடு வெற்றிகரமாக அமைவதற்கு உறுதுணையாக இருந்த காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு, மாவட்ட கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : DMK ,Trichy ,Kanchipuram North district ,Minister ,Tha.Mo.Anparasan ,Kanchipuram ,Kanchipuram North ,district ,committee ,Alandur Kathipara ,M.A. Vaithiyalingam ,secretaries ,E.Karunanidhi ,MLA ,Varalakshmi Madhusudhanan… ,
× RELATED போலிச்செய்திகளுக்கெதிரான...