சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது; எந்த குழப்பமும் இல்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி; கொள்கை சார்ந்த கூட்டணி; ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்பது வழக்கம்; நியாயமான இடங்களுடன் உடன்பாடு எட்டப்படும். திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்நாட்டில் நிலவரம் என்ன என்பதை மேலிட தலைவர்கள் கேட்பார்கள். தவெகவுடன் இதுவரை எந்தவித பேச்சுவார்த்தையும் காங்கிரஸ் நடத்தவில்லை. தவெகவுடன் பேச்சு நடத்த மேலிடத்தில் இருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த உத்தரவும் வரவில்லை என்று கூறினார்.
