ராயக்கோட்டை பகுதியில் புதினா பறிப்பில் விவசாயிகள் தீவிரம்

ராயக்கோட்டை : ராயக்கோட்டை அடுத்த தென்பெண்ணை ஆற்று பகுதியில், சாகுபடி செய்துள்ள புதினா பறிப்பில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தென்பெண்ணை ஆற்றங்கரை கிராம பகுதிகளான ராமாபுரம், உலகம், கூலியம், கொத்தகுறுக்கி, பண்டப்பள்ளி, பந்தர்பட்டி, தொட்டமெட்டரை பகுதிகளில் விவசாயிகள் புதினா சாகுபடி செய்துள்ளனர்.

குறைந்த செலவில் நல்ல லாபம் தரக்கூடிய புதினாவை பறித்து, அதற்கென விற்பனை செய்ய பிரத்யேகமாக மார்க்கெட் சூளகிரி மற்றும் உத்தனப்பள்ளியில் உள்ளது. அங்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

அதை தமிழக மற்றும் கர்நாடக வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். புதினாவை அதிக அளவில் விளைச்சல் செய்யும் விவசாயிகள், அதை பறித்து மூட்டைகளில் நிரப்பி வாகனங்களில் ஏற்றி ஐதராபாத், சென்னை, திருச்சி மற்றும் புதுவை, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு எடுத்துச்செல்கின்றனர். அதனால் விலை கூடுதலாக கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Related Stories: