அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்

 

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்த காலை 10.45 மணிக்கு எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். மதுரையில் நேற்று பியூஷ் கோயலுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தினார். பாஜகவுடன் நேற்று நடத்திய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பியூஷ் கோயலுடன் நேற்று 2 முறை எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். 2 முறை பேச்சு நடத்தியும் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் அமித் ஷாவை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்

Related Stories: