முதல்வர் பிறந்த நாள்: எர்ணாவூர் நாராயணன் வாழ்த்து

திருவொற்றியூர்: சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாபெரும் அரசியல் சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்தை வழி நடத்துபவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு ஒரே லட்சியமாக வாழ்ந்து வரும் தமிழக முதல்வர் சிறப்பான ஆட்சி மற்ற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற மாபெரும் சகாப்தங்கள் நமக்கு கிடைத்த காவலர்கள்.

அந்த வரிசையில் நான்காம் தலைமுறையாக நாடு போற்றும் நல்லாட்சி நாயகராக இன்றைய இளைய தலைமுறைகள் வாழ்வில் விளக்கேற்றி வைத்தராகவும், இயக்கத் தலைமை ஏற்ற எட்டு ஆண்டுகளில் எத்தனை இன்னல்கள், சவால்கள் சந்தித்து வெற்றி நாயகனாக திகழ்ந்து வருகிறார். உழைப்பு உழைப்பு தான் தளபதி என்பது போல் ஓய்வின்றி உழைக்கிறார். திராவிடர் மாடல் ஆட்சி தலைவர் அவர்களின் 73வது அகவையில் அவரின் திட்டங்களுக்கு தமிழக மக்கள் கூடிய விரைவில் மீண்டும் தமிழக முதல்வராக பரிசளித்து அரியணையில் அமரச் செய்யும் காலம் வெகு விரைவில் இல்லை என சமத்துவ மக்கள் கழகம் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பிறந்த நாளில் பல்லாண்டு பல நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Related Stories: