சென்னை: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். நடைமுறை வாழ்விலும் தன் இறுதி மூச்சு வரை சமரசம் இன்றி வாழ்ந்தவர் நல்லகண்ணு; பொதுவாழ்வில் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர்; தோழர் நல்லகண்ணு மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
